லேபிள்கள்

18.12.17

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு அபராதத்துடன் இன்று பதிவு

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 1ல் துவங்குகிறது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் முறையாக படிக்காமல், நேரடியாக பிளஸ் 2 பொது தேர்வு
எழுதுவோருக்கு, இந்த ஆண்டு கடைசி வாய்ப்பு என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேரடி தனித்தேர்வர்களுக்கான பதிவு, டிச., 11ல் துவங்கி, டிச., 16ல் முடிந்தது. இந்த காலகட்டத்தில் பதிவு செய்யாதோர், இன்று முதல், அபராத கட்டணத்துடன் பதிவு செய்யலாம். இந்த பதிவு, 20ம் தேதி முடிகிறது. ஆண்டு தோறும், வழக்கமான விண்ணப்ப பதிவு தவிர, தனித்தேர்வர்களுக்கு, 'தட்கல்' முறையில், கூடுதல் கட்டணத்தில் விண்ணப்பிக்க, வாய்ப்பு வழங்கப்படும். இந்த ஆண்டு, தட்கல் வாய்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, அபராத கட்டணத்துடன் இன்று துவங்கும் பதிவில், விண்ணப்பிக்க தவறினால், அவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாது.
அடுத்த ஆண்டில், பிளஸ் 2 தேர்வை நேரடியாக எழுத விரும்பினால், முதலில் பிளஸ் 1 தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். பின், அடுத்த ஆண்டில், பிளஸ் 2 தேர்வை எழுத வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக