லேபிள்கள்

16.1.18

ஊனத்தை அளவிட புதிய விதிமுறை

ஊனத்தை அளவீடு செய்வதற்கான புதிய விதிமுறைகளை, 
மத்திய அரசு வெளியிட்டு
உள்ளது. 
அவற்றை, மாநில அரசு பின்பற்ற வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள்
 தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஊனமுற்றோர் உரிமைகளுக்கான
 புதிய சட்டம், 2016ல், பார்லிமென்டில்  நிறைவேற்றப்பட்டு, அமலில் உள்ளது. 
இதன்படி, ரத்த ஒவ்வாமைகளால் ஏற்படும், 'தலசீமியா, ஹெமோபிலியா, 
சிக்கிள் செல், பார்க்கின்ஸன்' நோய், 'ஆசிட்' வீச்சால் பாதிப்பு உள்ளிட்ட, 
புதிதாக சேர்க்கப்பட்ட, 21 வகையான ஊனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஊனங்களையும், மருத்துவர்கள் அளவீடு செய்து, சான்று 
வழங்குவதற்கான விதிமுறைகள், மத்திய அரசால் உருவாக்கப்பட்டு, 
சமீபத்தில், அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளன. 
அவற்றை, மாநில அரசு பின்பற்ற வேண் டும் என, மாற்றுத் திறனாளிகள் 
கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக