லேபிள்கள்

15.1.18

அரசு துறையில் இணைக்க கோரி மொட்டை போட்ட ஆசிரியர்கள்

மத்திய பிரதேசத்தில், அரசு கல்வித் துறையில் தங்களை இணைக்கக் கோரி, நான்கு பெண்கள் உட்பட, ஏராளமான ஆசிரியர்கள், மொட்டையடித்து, எதிர்ப்பை தெரிவித்தனர்.

ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள அரசு கல்வி மையங்களில், 2.88 லட்சம் தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், கல்வித் துறையின் கீழ், தங்களை கொண்டு வந்து, அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் போபாலில், மொட்டையடிப்பு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து, போராட்ட அமைப்பான, ஆசாத் அத்யபக் சங்கத்தின் தலைவர், சிவ்ராஜ் வர்மா கூறியதாவது:நாங்கள் எந்த துறையின் கீழ் பணிபுரிகிறோம் என்பதே தெரியவில்லை. கல்வித் துறையில் கேட்டால், உள்ளாட்சி அமைப்பு என்கிறது; அங்கு கேட்டால், கல்வித் துறை என்கின்றனர்.
இப்படி பல ஆண்டுகளாக, நாங்கள் பந்தாடப்பட்டு வருகிறோம். எனவே, எங்களை கல்வித் துறையின் கீழ் கொண்டு வந்து, அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். முதல்வர் சிவ்ராஜ் சிங்கின் மனைவி சாதனா சிங்கை நேரில் சந்தித்து, நான்கு பெண்கள் உட்பட, மொட்டையடிக்கப்பட்ட ஆசிரியர்களின் தலைமுடியை, பரிசளிக்க திட்டமிட்டிருந்தோம்; ஆனால், போலீஸ் தடுத்து விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக