லேபிள்கள்

29.5.18

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இன்று மாலை, 'ரிசல்ட்'

 சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று மாலை வெளியாகின்றன.இதுவரை 10ம் வகுப்புக்கு, நடைமுறையில் இருந்த, பள்ளி அளவிலான தேர்வு முறை, இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டு,
அனைவருக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மேலும், கிரேடு முறையும் நீக்கப்பட்டு, 'ரேங்கிங்' முறையும் அறிவிக்கப்படும் என, தெரிகிறது.இந்நிலையில், இன்று மாலை, 4:00 மணிக்கு, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
தேர்வர்கள்,www.results.nic.in,www.cbseresults.nic.inமற்றும்www.cbse.nic.in என்ற, இணையதளங்களில், முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர், அனில் ஸ்வரூப், 'டுவிட்டர்' பக்கத்தில், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக