லேபிள்கள்

2.6.18

பழைய பஸ் பாஸ் காட்டி மாணவர்கள் பயணிக்கலாம்

'புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, பழைய பஸ் பாசில் மாணவர்கள் பயணிக்கலாம்; அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில்,
பெரும்பாலான பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 
தனியார் பள்ளிகள், 4ம் தேதி திறக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த கல்வி ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ், மாணவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. சீருடை அணிந்து வரும் மாணவர்கள், பழைய பஸ் பாசை காட்டி, இலவச பயணத்தை மேற்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
'பழைய பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களை, பஸ்களில் ஏற்றிச் செல்ல வேண்டும்; அவர்களிடம், கட்டணம் வசூலிக்கக்கூடாது என, நடத்துனர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 'மாணவர்கள் புகார் அளித்தால், பழைய பஸ் பாசை ஏற்க மறுக்கும் நடத்துனர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக