முதல் முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்டுள்ள, பிளஸ் 1 பொது தேர்வின் முடிவுகள், இன்று(மே 30) வெளியாகின்றன.
தமிழகத்தில் இந்தாண்டு முதல், பிளஸ் 1க்கும் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மார்ச்சில் துவங்கி, ஏப்ரலில் முடிந்த இந்த தேர்வில், 8.61 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:00 மணிக்கு வெளியாகின்றன.தேர்வர்களின் மொபைல்போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரம் எஸ்.எம்.எஸ்., ஆக வரும். மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில், பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். ஜூன், 4 முதல் மதிப்பெண் பட்டியலை பெறலாம்.
திக்.. திக்...
பிளஸ் 1 பொது தேர்வில், பெரும்பாலான வினாத்தாள்கள் கடினமாக இருந்தன. குறிப்பாக, ஜே.இ.இ., மற்றும், 'நீட்' நுழைவு தேர்வில் கேட்கப்படுவது போன்ற கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் பதில் அளிக்க திணறினர். விடை திருத்தத்தின்போது, 40 சதவீத மாணவர்கள், 'ஜஸ்ட் பாஸ்' என்ற தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே எடுத்தது தெரிய வந்தது.
இந்நிலையில், இன்றைய தேர்வு முடிவு எப்படி இருக்கும் என, மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஆனால், தேர்ச்சி விகிதம் பாதித்தால், விமர்சனம் ஏற்படும் என்பதால், பெரும்பாலான மாணவர்கள், தேர்ச்சி நிலைக்கு கொண்டு வரப்பட்டிருப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக