சட்டசபையில், 110 விதியின் கீழ், பணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத் துறையில், முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், குரூப் - 1
பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில், பங்கு பெறுவோருக்கான வயது வரம்பை உயர்த்தும்படி, பல்வேறு தரப்பிடமிருந்து, அரசுக்குகோரிக்கைகள் வந்துள்ளன.இதன் அடிப்படையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு உள்ள, வயது உச்சவரம்பை போல, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1, 1 ஏ, 1 பி' பணியிட தேர்வுகளுக்கும் வயது வரம்புமாற்றப்படுகிறது.இதன்படி, தற்போதுள்ள, எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., - பி.சி., - டி.என்.சி., பிரிவினருக்கான வயது உச்சவரம்பு, 35ல் இருந்து, 37 ஆக உயர்த்தப்படுகிறது.இதர பிரிவினருக்கான வயது உச்சவரம்பு, 30ல் இருந்து, 32 ஆகஉயர்த்தப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக