லேபிள்கள்

26.7.18

'வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் மத்திய அரசு தீவிர பரிசீலனை

வதந்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் ஆப் எனப்படும் தகவல் பரிமாற்ற சேவையை, உலகம் முழுவதும், 130 கோடி பேர், பயன்படுத்தி வருகின்றனர். நம் நாட்டில் மட்டும், 20 கோடி பேர், வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர்.இதன் வாயிலாக, தவறான தகவல்களும், வதந்திகளும் எளிதில் பரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, நாடு முழுவதும், பல அப்பாவிகள் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள், சமீபத்தில் நடந்தன.இதையடுத்து, வதந்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த, தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி, வாட்ஸ் ஆப் நிர்வாகத்துக்கு, மத்திய அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயலர், அஜய் பிரகாஷ் சாஹ்னியை, வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மாத்யூ ஐடிமா, நேற்று சந்தித்து பேசினார்.வாட்ஸ் ஆப் வாயிலாக வதந்திகள் பரவுவதை, உடனடியாக கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்து, இருவரும் விவாதித்தனர்.அப்போது, வாட்ஸ் ஆப் சேவைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்ததாக, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில், வாட்ஸ் ஆப் மூலம் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்கள், எங்கு பாதுகாக்கப்படும் என்பதில், மத்திய அரசு அதிக அக்கறை காட்டியதாக கூறப்படுகிறது.தகவல்கள் அனைத்தும், இந்தியாவில் தான்பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை, மத்திய அரசு முன் வைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக