லேபிள்கள்

23.7.18

நர்சிங் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

 'டிப்ளமா நர்சிங்' படிப்புக்கான விண்ணப்பம், இன்று(ஜூலை 23) முதல் வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, 2,000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது. அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், அலுவலக நேரங்களில், விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை, www.tnhealth.orgwww.tnmedicalselection.org என்ற, இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக