ஆசிரியர் தகுதி தேர்வினை பட்டதாரி மற்றும் இடை நிலைஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித்தேர்வாகவும் அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் ஏற்படும்இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்காலிபணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வுசெய்வதற்கு பணிநாடுபவர்களுக்கு போட்டித் தேர்வினைதனியாகவும் நடத்துவதற்கு அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.
*இது ஏற்கனவே ஆந்திர பிரதேசத்தில் உள்ள முறை.
*இதன்படி இனி வெயிட்டேஜ் முறை கிடையாது.
*ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நியமனதேர்வை எழுதி வெற்றி பெற்றால் அவர்களுக்கு பணிகிடைக்கும்.
* இனி ஆசிரியர் தகுதி தேர்வு என்பது நியமன தேர்வுஎழுதுவதற்கான தகுதி தேர்வு மட்டுமே.
* ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி ஏழு ஆண்டுசெல்லுபடியாகும். மதிப்பெண்களை அதிகரிக்க மீண்டும்மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டியஅவசியமில்லை.
அரசு பள்ளி ஆசிரியராக வேண்டும் என்றால் இனி இருதேர்வுகளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்றுதமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை ஆசிரியர் தகுதிதேர்வின் அடிப்படையில் நிரப்பி வருகின்றனர்.இந்நிலையில் வெயிட்டேஜ் மதிப்பெண்களை கொண்டுபணிக்கு தேர்வு செய்யப்படுவதால் பல்வேறுகுழப்பங்கள் நிலவுகின்றன.
இதையடுத்து இரு தேர்வுகளை நடத்த மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டத்தின் பரிந்துரை செய்தது.இதையடுத்து அந்த பரிந்துரையை ஏற்ற தமிழக அரசுஆசிரியர் தகுதி தேர்வை தனியாகவும் நியமனத்துக்கானபோட்டி தேர்வையும் தனித்தனியாக நடத்துவது என்றுஅறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையை தமிழகஅரசு அரசாணையில் வெளியிட்டது. போட்டி தேர்வுஎழுதுவதற்கு தகுதி தேர்வில் வெற்றி பெறுவதுகட்டாயம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக