லேபிள்கள்

25.7.18

அரசு பள்ளிகளில் கணினி வழி பயிற்சி

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும், ஜாபர்கான்பேட்டை, உயர்நிலை பள்ளி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
அந்த பள்ளியை, அமைச்சர் செங்கோட்டையன், நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகராட்சி கல்வித்துறை துணை கமிஷனர், மகேஸ்வரி ரவிக்குமார் உடன் இருந்தார்.பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: மாநகராட்சி பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. 90 சதவீத பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற, மாணவர்களை தயார் செய்து வருகின்றன. 3,000 அரசு பள்ளிகளில், விரைவில், 'ஸ்மார்ட்' வகுப்பறை அமைக்கப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, கணினி வாயிலாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக