தமிழகத்தில் கல்வித்துறை சார்பில், 13 மாவட்டங்களில் நடமாடும் நுாலகங்கள் அமைக்கப்பட்டு, பள்ளி மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என கல்வித்துறை
இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.மதுரையில் அவர் நேற்று கூறியதாவது:மாநில அளவில், ஜூலை, 14 முதல் ஆக., 14 வரை, 6 - 8 ம் வகுப்பு மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க, கல்வித்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு வாசிப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இதையொட்டி, 13 மாவட்டங்களில் நடமாடும் நுாலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.நுாலக வசதி இல்லாத அரசு பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு, இந்த நடமாடும் நுாலகங்களை கொண்டு சென்று, அப்பகுதி மாணவர்கள் படித்து பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்கள் தகவல் விபரங்கள், தனியாருக்கு வெளியான விஷயம் குறித்து எதுவும் தெரியாது. இதுகுறித்து போலீசில் தேர்வுத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக