லேபிள்கள்

7.8.18

17 லட்சம் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்!

 மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்க உள்ளனர். இது தெடார்பாக நேற்று நடந்த அரசு ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மகாராஷ்டிராவில், காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும், 7-வது சம்பள கமிஷனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று பல்வேறு பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியரகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. இதில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க இன்று முதல் (7-ம் தேதி) மூன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது . இதையடுத்து இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்குகின்றனர். இதில் 17 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக