லேபிள்கள்

8.8.18

இன்ஜி., கவுன்சிலிங்: தேதிகள் மாற்றம்

அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பான தேதி 
மாற்றப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், இன்று அரசு பொது விடுமுறை 
அறிவிக்கப்பட்டதால், அண்ணா பல்கலையில், இன்று நடப்பதாக இருந்த,
 
எம்.எஸ்சி., கவுன்சிலிங், தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. புதிய தேதி 
விரைவில் அறிவிக்கப்படும் என, அண்ணா பல்கலையின் மாணவர் 
சேர்க்கை இயக்குனர், நாகராஜன் அறிவித்துள்ளார். அதேபோல, 
இன்ஜினியரிங் இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கில், இட ஒதுக்கீடு பெற்ற 
மாணவர்கள், கல்லுாரிகளில் சேர்வதற்கு, இன்று கடைசி நாள் என, 
அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அவகாசம், 10ம் தேதி வரை 
நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட்
 உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக