அரசு அனுமதித்ததை விட அதிக கட்டணம் வசூலித்தால், நிர்வாகத்தை அரசே கையில் எடுக்கும்' என, 10
ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
தமிழகத்தில், 2009ம் ஆண்டு, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, பள்ளிகளில், எவ்வளவு கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க, கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டணம் நிர்ணயித்து வருகிறது. ஆனால், பல பள்ளிகள், அந்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக, தொடர் புகார்கள் வருகின்றன. இதற்கிடையில், சென்னை, பெருங்களத்துாரில் உள்ள, எஸ்.எஸ்.எம்., பள்ளியில், மாணவர்களிடம், தலா, இரண்டு லட்சம் ரூபாய் வைப்புத்தொகை கேட்ட விவகாரம், பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் என, 10 ஆயிரம் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித் துறையில் இருந்து, தனித்தனியாக, நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.அந்த நோட்டீசில், கல்விக் கட்டணம் குறித்து, விரிவான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே, மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும். சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தங்கள் கட்டண விபரங்களை, கட்டண கமிட்டியில் சமர்ப்பித்து, ஒப்புதல் பெற வேண்டும். மாறாக, நன்கொடையோ, கூடுதல் சிறப்பு வகுப்பு என்ற பெயரில், வைப்புத் தொகையோ வசூலிக்கக் கூடாது. கட்டண விபரங்களை, அவரவர் பள்ளி இணையதளத்திலும், பள்ளி அறிவிப்பு பலகையிலும், பெற்றோருக்கு தெரியும் வகையில், கட்டாயம் அறிவிக்க வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் வட்டார கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது, இந்த விபரங்களை ஆய்வு செய்வர். பெற்றோருக்கும் கட்டண விபரத்தை தெரிவிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தால், பள்ளிக் கல்வித் துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ளும்.
தமிழக அரசு இயற்றியுள்ள, தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்ட திருத்தத்தின்படி, முறைகேடுகள், கல்விக் கட்டண புகார்கள், அங்கீகாரம் புதுப்பிக்காதது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால், அந்த பள்ளிகளின் நிர்வாகத்தை, அரசே ஏற்று நடத்த முடியும்.புகாருக்கு உள்ளாகும் பள்ளிகளுக்கு, தனி அதிகாரியை நியமித்து, நிர்வாகத்தை கவனிக்கும் அதிகாரம், அரசுக்கு உள்ளது. எனவே, பள்ளிகள், எந்த விதமான விதிமீறல்களுக்கும் இடம் தராமல், இயங்க வேண்டும். இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக