மாநில நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியுள்ளோர்விண்ணப்பிக்க தயங்குவதால்,25க்கும் குறைவான
விண்ணப்பங்களே பெறப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பெயரில், செப். 15ல், ஆண்டுதோறும் மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆறு பேர், உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு பேர் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து ஒருவர், என 13 பேருக்கு விருது வழங்கப்படவுள்ளது. விருதுக்கு தகுதியுள்ளோர் பட்டியல் அனுப்ப, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில், இவ்விருதுக்கு தற்போது வரை, 25க்கும் குறைவான விண்ணப்பங்களே பெறப்பட்டுள்ளன. இயக்குனர் பரிந்துரைப்படி, இன்று முதல், மாவட்ட குழு, விண்ணப்பங்களைஆய்வு செய்ய வேண்டும். போதிய விண்ணப்பங்கள் பெறப்படாததால், ஆய்வு குழு அமைப்பதிலும், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தி.மு.க., தலைவர் கருணாநிதி இறப்பு காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், விண்ணப்பங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். குறைவான விண்ணப்பங்களே பெறப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு மீண்டும் தகவல் அளித்து, ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படும்' என்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக