லேபிள்கள்

15.8.18

குரூப் - 4 தேர்வு சான்றிதழ் பதிவேற்ற தேதி மாற்றம்

குரூப் - 4 தேர்வுக்கு, சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி மாற்றப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட
செய்திக்குறிப்பு: குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள், நாளை முதல் வரும், 30ம் தேதி வரை, சான்றிதழை பதிவு செய்ய, ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், கூடுதல் காலியிடங்கள் காரணமாக, விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை கண்டறிய, கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.எனவே, சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டியோர் பட்டியல், வரும், 27ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள், வரும், 30 முதல், செப்., 18 வரை, தமிழக அரசின் இ- --- சேவை மையங்களில் மட்டுமே, 'ஸ்கேன்' செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும்.தேர்வு செய்யப்பட்ட இ- - சேவை மையங்களின் முகவரி, அரசு பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக