லேபிள்கள்

15.8.18

இன்ஜி., துணை கவுன்சிலிங் : அண்ணா பல்கலை அறிவிப்பு

இன்ஜினியரிங் படிப்புக்கான துணை கவுன்சிலிங்கை, அண்ணா பல்கலை அறிவித்துஉள்ளது.அண்ணா பல்கலையின், ஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வரும் 20ல் முடிகிறது. இந்நிலையில், தனித்தேர்வு எழுதிய
மாணவர்களுக்கான துணை கவுன்சிலிங்கை, அண்ணா பல்கலை நேற்று அறிவித்தது.இதில், இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவர்கள், நாளை முதல், 20ம் தேதி வரை, அண்ணா பல்கலையின், இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கான, https://www.tnea.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு, சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கு வர வேண்டும்.சான்றிதழ் சரிபார்ப்பு தேதியும், கவுன்சிலிங் நடப்பதற்கான தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என, மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக