லேபிள்கள்

13.8.18

பள்ளியில் இறை வணக்க கூட்டம் மாணவர்களுக்கு இனி கட்டாயம்

பீஹார் மாநிலத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலையில் நடக்கும் இறை வணக்கக் கூட்டத்தின் போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

பீஹார் மாநிலத்தில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இந்த மாநில கல்வித் துறையின் முதன்மை செயலர், ஆர்.கே.மஹாஜன், மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:மாநிலத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலையில், கண்டிப்பாக, இறை வணக்கக் கூட்டத்தை நடத்த வேண்டும். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தவறாது பங்கேற்க வேண்டும்.இதன் மூலம், மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் நேர தவறாமை அதிகரிக்கும். இறை வணக்கக் கூட்டத்தின் போது, ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். ஒலிபெருக்கி இல்லாத பள்ளிகள், பள்ளி மேம்பாட்டு நிதியிலிருந்து வாங்க வேண்டும்.இறை வணக்கக் கூட்டத்தின் போது, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நன்னெறி கதைகளை கூற வேண்டும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளரக் கூடிய அளவில், அறிவுரைகள் வழங்க வேண்டும். மேலும், வகுப்பு அட்டவணையில், கடைசி பாடவேளையை, விளையாட்டுக்காக ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக