லேபிள்கள்

1.5.13


10+2+3 என்ற முறை சார்ந்த கல்விக்குத் தான், வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியும்-உயர்கல்வித் துறை அமைச்சர்
"திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க, கோர்ட் தடை விதித்துள்ளது,'' என, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் முனுசாமி கூறினார்


இத்துறை மானியக் கோரிக்கை மீது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்: தே.மு.தி.., -பாபு முருகவேல்: திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்ற, 40 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர். இவர்களின், கல்வித் தகுதி தான் இதற்குக் காரணமாக உள்ளது. மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர், திறந்த நிலை பல்கலையில், பட்டம் பெற்று, வேலை கிடைக்காமல் உள்ளனர். எனவே, திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
அமைச்சர் முனுசாமி: "திறந்தநிலை பல்கலையில், பட்டம் பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்கக் கூடாது' என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் தெளிவாக கூறுகின்றன. மார்க்சிஸ்ட்- ராமமூர்த்தி: திறந்த நிலை பல்கலைக் கழகங்களில் பயின்றவர்களுக்கு, வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்கக் கூடாது என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆட்சியில், வெளியிடப்பட்ட இந்த அரசாணையை மறுபரிசீலனை செய்யவேண்டும். உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்: 10+2+3 என்ற முறை சார்ந்த கல்விக்குத் தான், வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியும். 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என்பதே, முறை சார்ந்த கல்வியாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்த நிலை பல்கலையில் பயில்வது, முறை சாரா கல்வியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, முறைசாரா கல்விக்கு, வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியாது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக