ஆசிரியர்கள் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்த மதுரை உயர்நீதிமன்றம் அறிவுரை
நெல்லை கேடிசி நகரில் குடியிருக்கும் ஆசிரியர் வையணன் ராமதநாதபுரம் மாவட்டம் டிஎம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி
ஆசிரியராக (உயிரியல்)
கடந்த 17,7,12 முதல் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2012,13ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது
இடமாறுதல்
கலந்தாய்வில் வெளிப்படையான
நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. கலந்தாய்வில் பங்கேற்காத
தூத்துக்குடி மாவட்டத்தில்
பணியாற்றிய ஒரு ஆசிரியைக்கு முறைகேடாக நெல்லை மாவட்டத்திற்கு மாறுதல்
உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட்
கிளை யில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கில், ஆசிரியர் வையணன் கலந்தாய்வு நடவடிக்கைகளை குறை கூறி மோசடி செயலில் ஈடுபடுகிறார். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என பள்ளிக¢ கல்வி இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வினோத் கே.சர்மா, நிர்வாக காரணங்களுக்காக இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளதால் மேல் முறையீடு செய்யுமாறு கூறி மனுவை தள்ளு படி செய்தார். இதைத் தொடர்ந்து வையணன் தகுந்த ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், விமலா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அதில் கூறியிருப்பதாவது: ஆசிரியர்கள் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்தப்படவில்லை. விண்ணப்பம் அனுப்பாமலேயே ஆசிரியைக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எனினும், கல்வி ஆண்டின் இறுதியாகி விட்டதால் வரும் கல்வி ஆண்டில் (2013,14) கலந்தாய்வு நடத்தப்படும் போது ஆசிரியர் வையணன் விருப்பத்தின் பேரில் அவருக்கு பணியிடம் வழங்க வேண்டும்.
இந்த ஆண்டு கலந்தாய்வில் அனைத்து காலிப்பணி இடங்களை யும் ஒளிவு மறைவின்றி காண்பித்து வெளிப்படையான முறையில் கலந்தாய்வு நடத்த வேண்டும். உரிய இடம் கலந்தாய்வில் கிடைக்கவில்லை என நீதிமன்றத்திடம் நிவாரணம் கோரி ஆசிரியர்கள் வர அரசு வழி வகை செய்யக் கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக