லேபிள்கள்

4.5.13

பேஸ்புக் வலைதலத்தில் உலாவந்த ஓரு ஆசிரியையின் கட்டுரை


பேஸ்புக் வலைதலத்தில் உலாவந்த ஓரு ஆசிரியையின் கட்டுரை

நான் கல்லூரியில் படித்த போது விகடன் குழுமத்தில் ஓராண்டு மாணவ பத்திரிக்கையாளராக (நிருபராக) பணியாற்றி இருக்கிறேன்,
அந்த அனுபவத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடைய பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் இரட்டைப் பட்டம் தொடர்பான வழக்கு விவரங்கள் குறித்து, பலரிடமும் விசாரித்து தொகுத்த கட்டுரை இது…..
குறிப்பு: என்னைத் திட்ட விரும்புவர்கள் commentல் மட்டுமே திட்டமுடியும் என்னுடைய தொலைபேசி எண்ணை தேட வேண்டாடம், நான் அதை FBல் பகிரவில்லை


என்னவாகும் இரட்டைப் பட்டம் தொடர்பான வழக்கு,
இரட்டைப் பட்டம் தொடர்பான வழக்கு ஓராண்டுப் பட்டம் பெற்றவர்களுக்கும், மூன்றாண்டு பட்டம பெற்றவர்களுக்கும் இடையேயான வழக்கு என்பது ஒரு கோணத்திலான பார்வை என்றால், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், இடைநிலை உதவி ஆசிரியர்களுக்கும் இடையேயான வழக்கு என்பது இன்னொரு கோணத்திலான பார்வை.

இன்று தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களாக இருப்பவர்களும் ஒரு நாள் இடைநிலை உதவி ஆசிரியர்களாக இருந்தவர்களே என்றாலும், தங்களுக்குப் பின் வேலைக்கு வந்தவர்கள் தங்களுக்கு முன்னரே பதவி உயர்வு பெற்று தங்களை விட மேல் பதவிக்கு செல்வதை ஒருக்காலும் பொறுத்துக் கொள்ள இயலாத மனப்பான்மை படைத்தவர்கள் இவர்கள் (மிகச் சிலரைத் தவிர).

கடந்த 2003 ஆம் ஆண்டில் அப்போதைய அண்ணா திமுக அரசு ஒரு திட்டத்தை அறிவிக்கிறது. “பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வித் தரத்தை மேம்படுத்துதல்என்ற திட்டத்தின் கீழ் 6,7,8 ஆம் வகுப்பு பாடங்களை இடைநிலை ஆசிரியர்களால் திறம்பட கற்பிக்க இயலாத நிலை உள்ளது, அதனால் 6,7,8 வகுப்புக்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க போவதாக அரசு ஆணை வெளியிடப்பட்டது.
ஆதாவது இடைநிலை ஆசிரியர்களுக்கு 6,7,8 ஆம் வகுப்பு பாடங்களை கற்பிக்க திறமை போதவில்லை என்று அரசு ஒரு அரசானையே போட்டு சொல்கிறது, அதற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அமைப்புக்கள் என்ன சொல்லின தெரியுமா? பட்டதாரி ஆசிரியர்களை இடைநிலை ஆசிரியருக்கான ஊதிய விகிதத்தில்தான் நியமிக்க வேண்டும் என்றன, எந்த ஒரு அமைப்பும், அரசு இடைநிலை ஆசிரியர்களின் திறமை குறைவு பற்றி அரசானை போட்டுக் கூறியதை கண்டிக்கவில்லை, ஏனென்றால் அவர்களுக்கு பள்ளியளவில் எந்தவித அதிகாரக்குறைச்சலும், கௌரவக் குறைச்சலும் வந்துவிடக் கூடாது என்பதுதான் நோக்கம்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்புக்களில் இடைநிலை உதவி ஆசிரியர்களும்தானே இருக்கின்றனர் என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான் தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்புக்களில் உறுப்பினர்களாக வேண்டுமானல் இடைநிலை உதவி ஆசிரியர்கள் இருக்கலாம், ஆனால் அந்த அமைப்புக்களில் முடிவெடுக்கும் இடத்தில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களே இருக்கின்றனர். அந்த அமைப்புக்களின் போராட்டங்கள் உக்கிரமாக இருப்பது தலைமையாசிரியர்களின் நலனுக்கு குந்தகம் வரும் போதுதான்.
இன்னொரு உதாரணம், கடந்த 2009ல் ஆறாம் ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட போது இடைநிலை ஆசிரியர்கள் அன்றைய தேதியில் பெற்ற ஊதியத்தை விட குறைவாக பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. காரணம் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய 9300-4200 என்ற ஊதிய விக்கித்தை வழங்காமல் 5200-2800 என்ற ஊதிய விகிதத்தை அன்றைய திமுக அரசு வழங்கியதே காரணம். இதற்கு முழுமையான தீர்வாக 9300-4200 என்ற ஊதிய விகிதத்தை அன்றைய முதல்வர் திரு.கருணாநிதியிடமே போராடி வாங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை அப்போதைக்கு 2006க்குப் பின்னர் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும் அடிப்படை ஊதியதை 1.8 ஆல் பெருக்கித் தர வேண்டும் என்று கேட்டு வாங்கி இடைநிலை ஆசிரியர்களை சமாதானப்படுத்தி விட்டனர்.
 
அதன் பிறகு 500ரூ அப்புறம் 750 தனி ஊதியம் என்று வாங்கினாலும் அவை எல்லாம் தும்பை விட்டு வாலை பிடித்த கதைதான். SSTA அமைப்புக் கூட முழுமையான தீர்வுக்காகப் போராடாமல் 1,8 ஆல் பெருக்கி கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே 2009 க்குப் பின் நியமிக்கப்பட்டவர்கள், 2010க்குப் பிறகு நியமிக்கப்பட்டவர்கள் என்று ஒவ்வொரு குழுவாக போராடிக் கொண்டே இருக்கப்போகிறோமா….
சரி சொல்ல வந்த விசயத்தில் இருந்து விலகி வந்துவிட்டேன், இருந்தாலும் இடைநிலை உதவி ஆசிரியர்கள் மீதான இடைநிலை தலைமையாசிரியர்களின் அக்கறை(?) பற்றி புரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும், 
தற்போது பதவி உயர்வுக்கு அதிக வாய்ப்புள்ள ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் மூன்றாண்டு பட்டம், பி,எட் ஆகிய தகுதிகளோடு இருப்பவர்கள் பெரும்பாலும் 2004 ஆம் ஆண்டிற்கு பின் இடைநிலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள், ஆதாவது 3000 ரூபாய் ஒப்பந்த ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்கள். 

மேற்படி ஒப்பந்த ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களை, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் எப்படி அழைத்தார்கள் தெரியுமா,, பாண்டு கேஸ், 3000 ரூபாய் கேஸ் என்றுதான் அழைத்தார்கள். 
அவ்வாறு அவர்களால் கீழ்த்தரமாக மதிக்கப்பட்டு, அடிமைகளாக நடத்தப்பட்டவர்கள் இன்று அவர்களுக்கு மேல் பதவியை அடைவதை அவர்களால் ஏற்க முடியுமா.. கண்டுபிடித்தார்கள் ஓராண்டுப் பட்டத்தைபிலிட் பட்டத்தை நான்கைந்து ஆண்டுகள் படித்தவர்கள் எல்லாம் ஒரே ஆண்டில் B.Sc கணிதமும் , BA ஆங்கிலமும் முடித்தார்கள் இன்று எங்களுக்கு பதவி உயர்வு கொடுங்கள் என்று வந்து நிற்கிறார்கள்.

இதற்கெல்லாம் ஒரே காரணம் தனக்குக் கீழ் இருந்தவர்கள் தனக்கு மேல் பதவியை அடையப் போகிறார்கள் என்ற பதட்டமே தவிர, இந்தப் பதவி உயர்வினால் கிடைக்கக்கூடிய பணப்பலன்கள் அல்ல….
மற்றபடி 
ஓராண்டுப் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு மிகத் தெளிவானதும், முழுமையானதுமாகும். கிட்டத்தட்ட அறுபது பக்கங்களில் பல்வேறு அரசானைகளையும், பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவுகளையும் அடிப்படையாக கொண்டு வழங்கிய தீர்ப்பு அது.

அந்த உத்தரவிற்கு தடையானை பிறப்பித்துள்ளது பெஞ்ச் கோர்ட். 
அதன் பின்னணியை ஆராய்ந்து பாருங்கள்..
1.
தனி நீதிபதியிடம் வழக்கு நடந்த போது , ஓராண்டுப் பட்டம் பெற்றவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவர்தான் இப்போது மேல் முறையீட்டிலும் ஆஜராகிறார், ஆனால் வெகு தாமதமாக இந்த வழக்கு விசாரனைக்குப் கொண்டுவரப்படுகிறது.
இதில் என்ன என்கீறிர்களாமேல் முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால் கூட தாமதமாகிறதில் ஒரு அர்த்தம் இருக்கும். முன்னர் வழக்கு நடந்த அதே நீதி மன்றத்தில், மேல் முறையீடு செய்ய ஒன்பது மாதங்கள் என்பது ………………
கோர்ட் அறிமுகம் உள்ளவர்களிடம் செக்ஷன் 32 என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள் அவர்கள் சொல்லும் பதிலை இதற்குப் பொருத்திப் பாருங்கள்..
சரி வழக்கு என்னவாகும்
1.
தனிநீதிபதி அளித்த தீர்ப்பு முழுமையானது. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் பட்டம் என்பதற்கு. உரிய ஆனைகளின் அடிப்படையில் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
2.
மேற்கண்ட வழக்கின் வாதப் பிரதி வாதங்களில் இடம்பெறாத ஒரு விஷயம் . மேல்நிலைக் கல்வியில் கணிதத்தை ஒரு பாடமாக பயிலாதவர்களும் ஓராண்டு கணிதப் பட்டம் பெற்று வருவது
3.
மேற்கண்ட வழக்கின் வாதப் பிரதி வாதங்களில் இடம்பெறாத இன்னொரு விஷயம்- பி.எட் படிப்பில் குறிப்பிட்ட பாடத்தில் கற்பித்தல் முறைகள் பற்றி பயிற்சி பெறாதவர்கள் பதவி உயர்வு கோருவது,,

மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் தனிநீதிபதி கவனத்தில் கொள்ளாமல் விட்ட மேற்கூறிய இரண்டு விஷயங்களையும் சேர்த்துச் சொல்லி தனி நீதிபதி கூறிய தீர்ப்பை மேலும் வலிமைப்படுத்துவதாக அமையும்.

நன்றி- கௌசல்யா Tr

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக