நாளை முதல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேர, நாளை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை ரூ.500 செலுத்தியும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளலாம்.
தபால் மூலம் விண்ணப்பங்களை பெற தங்களை பற்றிய கடிதம் மற்றும் ரூ.750ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.450ம் வரைவோலை எடுத்து The Secretary, Tamilnadi Engineering Admissions. Anna University, Chennai - 600025. என்ற முகவரி மூலம் விண்ணப்பங்களை பெறலாம்.
www.annauniv.edu/tnea2013 என்ற இணையதளத்திலும் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள் மே 4 முதல் 20ம் தேதி வரை, காலை 9.30 முதல் மாலை 5.30 வரை (ஞாயிற்று கிழமைகளிலும்) வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 20ம் தேதி 5.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களை பெற www.annauniv.edu என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 044-2235 8265, 2235 8266, 2235 8267 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக