லேபிள்கள்

1.5.13


அங்கீகாரம் பெறாத மெட்ரிக் பள்ளிகளின் பட்டியல் வெளியிட உத்தரவு
தமிழகத்தில், அங்கீகாரம் பெறாத, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெயர் பட்டியலை, துறை இணையதளத்தில் வெளியிட, மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனருக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த, வெங்கடாசலம் என்பவர் தாக்கல் செய்த, பொது நல மனு: சில ஆண்டுகளுக்கு முன், கும்பகோணத்தில், தனியார் பள்ளியில் தீ விபத்து நடந்தது. அதையடுத்து, பள்ளிக்கு அங்கீகாரம் பெற வேண்டும் என்றால், அந்த பள்ளி கட்டடத்துக்கு, தீயணைப்புத் துறையிடம் இருந்து, ஆட்சேபனையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டது.

சென்னை, வியாசர்பாடி, எம்.கே.பி., நகரில் இயங்கிவரும், டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் பள்ளிக் கட்டடத்துக்கான, என்..சி.,யை, தீயணைப்புத் துறையிடம் இருந்து பெற முடியவில்லை. இருந்தும் அதே கட்டடத்தில், பள்ளி தொடர்ந்து இயங்க, அரசு அனுமதித்து உள்ளது. 2011 ஜூன் முதல், இப்பள்ளி அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகிறது.

பள்ளிக் கட்டத்துக்கான ஒப்புதல் சான்றிதழ், அங்கீகாரம் ஆகியவற்றை பெறாததால், இந்த பள்ளியில் படிக்கும், 3,000 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தமிழகத்தில், அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெயர் மற்றும் முகவரியை வெளியிட, மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மனுவை விசாரித்த, ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி என்.பால்வசந்தகுமார் அடங்கிய, முதல் பெஞ்ச் பிறப்பித்துள்ள உத்தரவில், "தமிழகத்தில் உள்ள, அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெறாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெயர் பட்டியலை, மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர், இரண்டு வாரத்திற்குள், துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது
.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக