பிளஸ் 2 தேர்வில் இரண்டு மாணவர்கள் 1189 பெற்று முதலிடம்
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 1189 மாணவர்கள் எடுத்து நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா, மற்றும் அபினேஷ் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
இரண்டாம் இடத்தை நாமக்கலை சேர்ந்த பழனிராஜ், ஓசூரை சேர்ந்த அகல்யா, 1188 / 1200 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர். 1187 / 1200 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 9 பேர் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இன்று காலை வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின்படி தேர்வெழுதிய
88.1% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்னர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளில் 84.7% மாணவர்களும்,
91% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கணிதப் பாடத்தில்
2,352 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.இதேப்போல, உயிரியலில் 682 பேரும், தாவரவியலில் 11 பேரும், இயற்பியலில் 36 பேரும், வேதியியலில் 1,499 பேரும், வணிகவியலில் 1,336 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 1,469, வணிகக் கணிதம் பாடத்தில் 430 பேரும், கணிதப் பதிவியல் 1815, நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.விலங்கியல் பாடத்தில் ஒருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக