கருணை அடிப்படை வேலை ; உரிமையல்ல: டெல்லி உயர்நீதிமன்றம்
"கருணை அடிப்படையில் வேலை அளிப்பதை, உரிமையாக கருத முடியாது' என, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனம் ஒன்றில், பணியாற்றிய தொழிலாளர்கள், ஐந்து பேர், திடீரென இறந்து விட்டனர். அவர்களின் வாரிசுகள், கருணை அடிப்படையில் வேலை கேட்டு, அந்த நிறுவனத்தில் மனு செய்தனர்; மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
அதை எதிர்த்து, தொழிலாளர்களின் வாரிசுகள், மத்திய அரசின் தொழிலாளர் நடுவர் மன்றத்தை அணுகினர். ஐந்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கும், கருணை அடிப்படையில் வேலை அளிக்க வேண்டும் என, நடுவர் மன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு நிறுவனம், டில்லி ஐகோர்ட்டில் முறையிட்டது. இந்த வழக்கு, நீதிபதி விபின் சாங்கி முன்னிலையில்,
சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி தன் உத்தரவில் கூறியதாவது:
கருணை அடிப்படையில் வேலை கோருவதை, உரிமையாக கருத முடியாது; இதை, சுப்ரீம் கோர்ட்டும், பல தீர்ப்புகளில் உறுதிபடுத்தியுள்ளது. இந்த மத்திய அரசு நிறுவனத்தில், தொழிலாளர் பணியிடம் காலியாக இல்லை என்பதும், கூடுதல் தொழிலாளர்களை வெளியேற்ற, அந்த நிறுவனம், தானாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டத்தை அறிவித்துள்ளதும் தெரிய வருகிறது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி சாங்கி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக