"ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி வரை பயிலும், மாற்றுத் திறனாளி மாணவர்களின், கல்வி உதவித் தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும்" என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்
மனவளர்ச்சி குன்றியோருக்கு, சிகிச்சை அளிக்க, 32 நடமாடும் சிகிச்சை பிரிவுகள் துவங்கப்படும். பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர்கள், முடநீக்கு வல்லுனர்கள் ஆகியோரைக் கொண்டு, இப்பிரிவு செயல்படும். இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு: ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் கல்வி பட்டப் படிப்பு வரை படிக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு, 500 ரூபாய் முதல், 3,500 ரூபாய் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும்.
இதேபோல், பார்வையற்ற மாணவர்களின், வாசிப்பு உதவியாளர்களுக்கு, அவர்கள் படிக்கும் வகுப்புகளுக்கு ஏற்ப, 1,500 முதல், 3,000 ரூபாய் வரை உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இத்தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும். கால்கள் பாதிக்கப்பட்ட, 400 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்கூட்டர், இனி, 1,000 பேர்களுக்கு வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக