நாளை பிளஸ்–2 தேர்வு முடிவுகள்
எட்டு லட்சம் மாணவ–மாணவிகள் எழுதியுள்ள பிளஸ்–2 தேர்வு முடிவு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை இணையதளம் மூலம் உடனடியாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக
பிளஸ்–2 தேர்வு கருதப்படுகிறது. காரணம் இந்த தேர்வில் ஒரு மாணவர் எடுக்கும் மதிப்பெண்தான் அவர் செல்ல உள்ள மேற்படிப்பை தீர்மானிக்கிறது. மருத்துவம், என்ஜினீயரிங், விவசாயம், தொழிற்கல்வி, சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு மட்டுமல்லாமல் கலை அறிவியல் படிப்புகளுக்கும், ஆசிரியர் பயிற்சிக்கும் பிளஸ்–2 மதிப்பெண்ணைத்தான் பார்க்கிறார்கள்.
தொழிற்கல்வி படிப்புகளில் அதிக கட் ஆப் மார்க் பெற்று விரும்பும் கல்லூரியில் சேரவும் பிளஸ்–2 மதிப்பெண்தான் அடிப்படை. எனவே, பிளஸ்–2 தேர்வில், தேர்வு எழுதிய மாணவ–மாணவிகளை விடவும், அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களை காட்டிலும் அவர்களின் பெற்றோர்தான் ‘டென்ஷன்’ ஆகிறார்கள். தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெற்று புகழ்பெற்ற கல்லூரியில் சேர்ந்துவிட்டால் போதும். படித்து முடித்ததும் கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக வேலை கிடைத்துவிடும் என்பது அனைத்து பெற்றோரின் ஆசையாக உள்ளது. எனவேதான் பிளஸ்–2 தேர்வு முடிவை அவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு மார்ச் மாதம் 1–ந் தேதி தொடங்கி 27–ந் தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதி இருக்கிறார்கள். விடைத்தாள் மதிப்பீட்டு பணி மார்ச் 26–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13–ந் தேதி முடிந்தது.விடைத்தாள் திருத்துவது முடிவடைந்ததும் மதிப்பெண் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி சென்னை கிண்டியில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மையத்தில் (டேட்டா சென்டர்) மேற்கொள்ளப்பட்டது. மதிப்பெண் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. மதிப்பெண்ணிலோ, பெயர், பள்ளி பெயர், பிறந்த தேதி ஆகியவற்றிலோ சிறு தவறுகூட வந்துவிடக்கூடாது என்பதற்காக பதிவு விவரங்கள் மிகவும் ஆய்வு செய்யப்பட்டன.
இதற்கிடையே, பிளஸ்–2 தேர்வு முடிவு மே 9–ந் தேதி வெளியிடப்படும் என்று ஏப்ரல் 27–ந் தேதி அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்படி, தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு சென்னை கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்குனரகத்தில் வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தேர்வு முடிவுகளையும், ரேங்க் பட்டியலையும் வெளியிடுகிறார்.
தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில வினாடிகளில் ஆன்லைனில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரிகளில் மாணவ–மாணவிகள் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையத்தில் (நிக் சென்டர்) மாணவ–மாணவிகள் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங் களிலும் இதே போன்று இலவசமாக தேர்வு முடிவை அறிய தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள சிங்காரவேலர் மாளிகை கட்டிடத்தின் தரைதளத்தில் இயங்கும் மக்கள் குறைதீர்ப்பு மையத்திலும், 5–வது தளத்தில் செயல்படும் தேசிய தகவலியல் மையத்திலும் மாணவ–மாணவிகள் தேர்வு முடிவுகளை இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சென்னை கலெக்டர் ஏ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக