மெட்ரிகுலேஷன்
பள்ளிகளில் பெயிலாகும் நிலையில் உள்ள மாணவ-மாணவிகளை பள்ளிகள் மூலம் தேர்வு எழுத அனுமதிக்க
முடியாது என்றும் தனித்தேர்வர்களாக எழுதவேண்டும் என்றும் வலியுறுத்தும் 35 மெட்ரிகுலேஷன்
பள்ளிகள் மீது பெற்றோர்கள், மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அந்த
புகார்கள் குறித்து விசாரணை நடத்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
தனித்தேர்வர்களாக
எழுத வைப்பது
தமிழ்நாட்டில்
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை அடைய வேண்டும்,
அதனால் பள்ளிக்கூடங்களில் மாணவர்சேர்க்கை அதிகரிக்கும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள்
எண்ணுகிறார்கள்.
பெயிலாகும்
நிலையில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களை பள்ளிக்கூடங்கள் மூலம் தேர்வு எழுதி,
அந்தமாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் பள்ளிக்கூடத்தின் தேர்வு தேர்ச்சி சதவீதம்
பாதிக்கும் என்று கருதி அப்படிப்பட்ட மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுதுவதற்கும் அல்லது
மாற்று சான்று கொடுப்பதற்கும் பல பள்ளிகள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெற்றோர்கள், மாணவர்கள் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள்
இயக்குனரகத்திற்கு புகார் செய்தனர். மொத்தம் 35-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது புகார்
வந்துள்ளன.
அந்த
புகார்களை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் பதிவு செய்து புகார்வந்த பள்ளிகளில்
அந்தந்த பகுதி மெட்ரிகுலேஷன் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து அந்தந்த பள்ளிகளில் பள்ளிக்கூட
மாணவர்களாக தேர்வு எழுத ஏற்பாடு செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த
உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பள்ளிக்கூடங்கள்மீது
நடவடிக்கை
மெட்ரிகுலேஷன்
பள்ளிகளில் காலாண்டு தேர்வு எழுதியவர்களின் பெயர் பட்டியல் இறுதி ஆண்டு தேர்வு எழுதுவோர்
பட்டியலில் உள்ளதா? என்று மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர்கள் சரிபார்க்கவேண்டும். அவ்வாறு
பெயர் விடுபட்டிருந்தால் உரிய விளக்கத்தை பள்ளிக்கூடங்களில் கேட்கவேண்டும்.
மாணவர்கள்
குறைவாக மதிப்பெண் பெற்ற காரணத்தால் எஸ்.எஸ்.எல்.சி. அல்லது பிளஸ்-2 தேர்வை தனித்தேர்வர்களாக
எழுத பள்ளிக்கூட நிர்வாகம் ஏற்பாடு செய்வது தெரிந்தால், அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று எச்சரிக்க வேண்டும்.
எந்த
ஒரு மாணவரும் தனித்தேர்வர்களாக எழுதக்கூடாது. அதற்கானநிலை முழுவதும் தவிர்க்கப்பட்டது
என்று உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக