லேபிள்கள்

22.4.14

தேர்தலின் பொது அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு ரூ.500 முன்பணம் ...

தேர்தலின்போது, ஓட்டுசாவடியில் தண்ணீர் வசதி, தற்காலிக பந்தல், தடுப்புவேலி, மின்சாரம் இல்லாத பகுதியில் மின் வசதி, தளவாட பொருட்கள் வசதியை, அந்தந்த பகுதி, வி.ஏ.ஓ.,க்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் முடிந்ததும், வவுச்சரை கொடுத்து, வி.ஏ.ஓ.,க்கள் அதை, தேர்தல் ஆணையத்தில் பெற்று கொள்ளலாம். வி.ஏ.ஓ.,க்கள் கையில் இருந்து, பணத்தை செலவழித்து வந்தனர். இதற்கான தொகை, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு மாதிரியாக இருந்தது. இந்த ஆண்டு வி.ஏ.ஓ.,க்களுக்கு செலவினமாக, ரூ.ஆயிரம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில்,ரூ.500-ஐ, முன்பணமாக வழங்கவும் கூறப்பட்டுள்ளது. இதன்படி 32 மாவட்டத்தில் உள்ள, 60 ஆயிரத்து 418 ஓட்டு சாவடிக்கு, ரூ.6 கோடியே 4 லட்சத்து 18 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில்ரூ.3 கோடியே, 2 லட்சத்து 9 ஆயிரத்தை முன்பணமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக