லேபிள்கள்

25.4.14

பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறியும் பணி மும்முரம்.

கரூர் பரமத்தி பஞ்.யூனியனில்,அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கரூர் மாவட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் க.பரமத்தி பஞ். யூனியனில், 6 முதல் 14 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிவதற்காக குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பு பணி, 1ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

இதற்கான பணியில், ஆசிரியர், பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பள்ளி செல்லா குழந்தைகள் எவரும், தங்களது பகுதிகளில் இருப்பதை கண்டறிந்தால், பஞ். தலைவர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும்.அப்படி பள்ளி செல்லா குழந்தைகள் என கண்டறியப்பட்டால், அவர்களை, பள்ளியில் சேர்ப்பற்கான நடவடிக்கை அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மேற்கொள்ளப்படும். இந்த பணி, அடுத்த மாதம் 20ம்தேதி வரை நடைபெறும். இத்தகவலை, க.பரமத்தி வட்டாரவள மைய மேற்பார்வையாளர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக