இடைநிலை ஆசிரியர் பயிற்சிக் கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
தொடக்கக் கல்வி பட்டய படிப்பில் 2-ம் ஆண்டு மாணவர்க ளுக்கான தேர்வு ஜூன் 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரையும், முதலாவது ஆண்டு மாணவர் களுக்கு ஜூன் 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரையும் நடைபெறும். தேர்வுகள் தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும். தேர்வுக்கால அட்டவணை வருமாறு: இரண்டாம் ஆண்டு ஜூன் 11 (புதன்) இந்திய கல்வி முறை ஜூன் 12 (வியாழன்) கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-2 ஜூன் 13 (வெள்ளி) மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்)-2, இளஞ்சிறார் கல்வி-2 ஜூன் 14 (சனி) ஆங்கில மொழிக்கல்வி-2 ஜூன் 16 (திங்கள்) கணித வியல் கல்வி-2 ஜூன் 17 (செவ்வாய்) அறிவியல் கல்வி-2 ஜூன் 18 (புதன்) சமூக அறிவியல் கல்வி-2 முதலாம் ஆண்டு ஜூன் 20 (வெள்ளி) கற்கும் குழந்தை ஜூன் 21 (சனி) கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத் துதலும்-1 ஜூன் 23 (திங்கள்) மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்)-1, இளஞ்சிறார் கல்வி-1 ஜூன் 24 (செவ்வாய்) ஆங்கில மொழிக்கல்வி-1 ஜூன் 25 (புதன்) கணிதவியல் கல்வி-1 ஜூன் 26 (வியாழன்) அறிவியல் கல்வி-1 ஜூன் 27 (வெள்ளி) சமூக அறிவியல் கல்வி-1 இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக