உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது இரண்டு ஆண்டுகளாக தடைபட்டுள்ளதால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
அரசுப்பள்ளிகளில் ஆண்டுதோறும், பள்ளியின் தரம், மாணவர் எண்ணிக்கை, வகுப்பறை, தலைமையாசிரியர் அறை போன்ற அடிப்படை வசதிகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றைஆராய்ந்து, மாநில அரசு மூலம், பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுகிறது.தரம் உயர்த்துவதன் மூலம், மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். கிராமப்புற மாணவர்களின் உயர்நிலை படிப்பிற்கும் வசதியாக இருந்தது. துவக்கப் பள்ளிகள் நடுநிலையாகவும், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலையாகவும், உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளியாகவும் தரம் உயர்த்தப்படும். பெரும்பாலும் நடுநிலைப் பள்ளிகளே, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.தற்போது, அந்தந்த பகுதிகளில் துவக்கப் பள்ளிகள் அதிகரித்து வருவதால், நடுநிலைப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் அனைத்து வசதிகள் இருந்தும், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில், ஐம்பதிற்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.உயர்நிலைப் பள்ளிகள், குறிப்பாக, கிராமப் புறங்களில் குறைவாகவே உள்ளது. ஒரு சிலநடுநிலைப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. பள்ளியின் வசதிகள், பல்வேறு வழிகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்எண்ணிக்கை மற்றும் பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக மாற்றக் கோரி, இரண்டு ஆண்டுகளாக பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு வருகிறது.இருப்பினும் தரம் உயர்த்தப்படாமல் இருப்பது, பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏமாற்றமாக உள்ளது.
உடுமலை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: மாணவர்களின் உயர்நிலை வகுப்புகளுக்கு எந்தவித தடைகளும் ஏற்படாதிருக்க வேண்டும் என்னும் நோக்கில், பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகிறது. 2011 ம் ஆண்டில் திருமூர்த்தி நகர் நடுநிலைப்பள்ளி மற்றும் கொங்கல் நகரம் அரசு நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டன்.இரண்டு ஆண்டுகளாக உடுமலை பகுதியில் நான்கு பள்ளிகளும், குடிமங்கலம் பகுதியில் ஒரு பள்ளியும் தரம் உயர்த்த வேண்டிய நிலையில் இருந்தும் உயர்த்தப்படாமல் இருக்கிறது. தரம் உயர்த்த வேண்டி, கல்வித்துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டும் உத்தரவு வெளியிடப்படவில்லை. இந்த கல்வியாண்டிலும் தரம் உயர்த்துவது குறித்து பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.உயர்நிலைப்பள்ளிகள் போதிய அளவில் இல்லாததால், மாணவர்கள், தொலைதூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்களின் கல்வி தடைபடும் நிலை உருவாகி வருகிறது. நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும் என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக