ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளில் 1,129 காலியிடங்களையும், இதேபோல், இந்திய வனப்பணியில் (ஐஎப்எஸ்) 110 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் (www.upsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக