லேபிள்கள்

30.7.15

TNPSC: நேர்காணல், கவுன்சிலிங் தேதிகள் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவை ஒட்டி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சான்றிதழ்சரிபார்ப்பு மற்றும் சட்டப் பல்கலையின் கவுன்சிலிங் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டன.டி.என்.பி.எஸ்.சி.,
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '30ம் தேதி, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, அன்று நடக்க இருந்த குரூப் - 4 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3க்கான சான்றிதழ் சரிபார்ப்பும், குரூப் --- 2 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வும், ஜூலை, 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் அறிவிப்பில், 'அனைத்து அரசு சட்டக் கல்லுாரிகளில், ஐந்து ஆண்டு படிப்புக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஜூலை, 30ம் தேதிக்கு பதில், ஆகஸ்ட், 3ம் தேதி நடத்தப்படும்' என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக