ஆசிரியர்களின் எதிர்ப்பால் இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளை மாற்ற கலவித்துறை முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி கலந்தாய்வில் பங்கேற்க ஏற்கனவே வேலை பார்க்கும் இடத்தில் குறைந்தது ஒரு ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நியதி 3 ஆண்டாக மாற்றப்பட்டது. இதனால் ஒரு இடத்தில் 3 ஆண்டுக்கும் குறைவாக பணியாற்றிய பல ஆயிரம் ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் சில விதிமுறைகள் தங்களுக்கு பாதகமாக இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நிர்வாக காரணங்களால் இடமாறுதலுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகள் முறைகேடுக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும் வகையில் இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே, இவற்றை மாற்றம் செய்து பழைய முறைப்படி கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதனால் நெறிமுறைகளில் மாற்றம் செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாற்றங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் அனேகமாக ஆகஸ்டு முதல் வாரம் கவுன்சலிங் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக