லேபிள்கள்

1.8.15

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல்களை சனிக்கிழமை (ஆக.1) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில், விடைத்தாள் நகல்களைக் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் www.scan.tndge.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகல்களைப் பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாளைப் பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அதே இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வருகிற 5, 6 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.  மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை பணமாகச் செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக