லேபிள்கள்

13.8.15

சுதந்திர தின விழாவில் மரக்கன்று நட கல்வித்துறை உத்தரவு

சுதந்திர தின விழாவில், ஆசிரியர்கள், மரக்கன்றுகளை நட வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.'குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று, பள்ளிகளில், கண்டிப்பாக தேசியக் கொடியேற்ற வேண்டும் என்ற உத்தரவை, சில பள்ளிகள் கடைபிடிப்பதில்லை' என, கல்வித்துறைக்கு புகார் சென்றது.

நடப்பாண்டில், இந்த தவறு நடக்கக்கூடாது என்றும், சுதந்திர தின விழா நாளன்று, பள்ளிகளில், ஆசிரியர்கள், மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முருகன் கூறுகையில், ''கல்வித்துறையின் விரிவான சுற்றறிக்கை குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக