லேபிள்கள்

12.8.15

எஸ்.எஸ்.ஏ., கூடுதல் கல்வி அலுவலர்பணியிட கலைப்பின் பின்னணி

அனைவருக்கும் கல்வி இயக்கக (எஸ்.எஸ்.ஏ.,) கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் கலைக்கப்பட்டுள்ளது.
திட்டத்தை நிறுத்தப் போவதற்கான அறிகுறியே இது என்கின்றனர் பணியாளர்கள்.பள்ளி வயதுள்ள அனைத்து குழந்தைகளும், கட்டாயம் ஆரம்பக் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு, கடந்த, 2002ல், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தை (எஸ்.எஸ்.ஏ.,) ஏற்படுத்தியது.


மத்திய அரசு, 65 சதவீதம், மாநில அரசு, 35 சதவீதம் நிதி ஒதுக்கீடு வழங்கி வருகின்றன.மாவட்டந்தோறும் எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் கலைக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே நிரந்தரமாக அப்பணிகளை கவனிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.எஸ்.எஸ்.ஏ., வட்டாரங்கள் கூறுகையில், 2002ல் துவக்கப்பட்ட எஸ்.எஸ்.ஏ.,திட்டம், கலைக்கப்படும் என்ற பேச்சு எழத் துவங்கியுள்ளது. அதன் விளைவாக தான், எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் கலைக்கப்பட்டுள்ளன. இனி கல்வித்துறை மற்றும் எஸ்.எஸ்.ஏ., ஆகிய இரு பணிகளையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே கவனிக்க வேண்டும் என்பதால், பணிகளில் தொய்வு ஏற்படலாம் என்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக