லேபிள்கள்

14.8.15

ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு புகைப்படம்: தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

'ஆதார் எண் இல்லாத மாணவர்களை சிறப்பு முகாமிற்கு அழைத்துச்சென்று அந்த அட்டைக்கான புகைப்படம் எடுக்க வேண்டும்,என, தலைமைாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

மாணவர்களின் அனைத்துவிதமான கல்வி உதவித்தொகைகளும் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இதற்கு அவர்கள் ஆதார் எண் சமப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல மாணவர்களிடம் ஆதார் எண் இல்லை. அவர்கள் குறித்து கணக்கெடுத்து புகைப்படம் எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“ பள்ளிகளில் ஆதார் எண் இல்லாத மாணவர்களை,சம்பந்தப்பட்ட கலெக்டர், தாலுகா, நகராட்சி அலுவலங்களில் நடக்கும் சிறப்பு முகாமிற்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்று படமெடுக்க வேண்டும். அதற்கு அவர்களது பெற்றோரின் ஆதார் எண்ணை ஆதாரமாக கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கும்,”என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக