லேபிள்கள்

11.8.15

பள்ளிக்கல்வித் துறை - நாளை முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வருகிற 12-ஆம் பள்ளிக் கல்வித் துறை 2015 - 2016-ஆம் கல்வியாண்டுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு குறித்த விவரம்:


 12-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள்மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு, 

14-ஆம் தேதி அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

16-ஆம் தேதி அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கானக் கலந்தாய்வு நடைபெறும்.


18-ஆம் தேதி அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும், 

22, 23-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வும், 

23-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும், 24-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறும்.

24-ஆம் தேதி முதுகலை ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்வது தொடர்பான கலந்தாய்வும் (55 நபர்கள் மட்டும்), 


பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.

12-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் தொடர்பான கலந்தாய்வும், 

16-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெற உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக