லேபிள்கள்

14.8.15

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில சிறப்பு வகுப்புகள் துவக்கம்!

பள்ளிக் கல்வித் துறையின், அனைவருக்கும் கல்வி இயக்ககமும், கரடி பாத் எஜுகேஷன் கம்பெனி என்ற தனியார் கல்வி நிறுவனமும் இணைந்து, தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பது; பேசுவது; படிப்பது போன்றவற்றை எளிய
முறையில் பயிற்றுவிக்க, முடிவு செய்து உள்ளன.

90 பள்ளிகளில்...

இதன் மூலம், அரசு பள்ளி மாணவர்கள், எளிய முறையில் ஆங்கிலத்தை கற்க முடியும் என, கருதியதால், அனைவருக்கும் கல்வி இயக்ககம், கரடி பாத் எஜுகேஷன் கம்பெனியுடன், மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் முன்னோட்டமாக, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், தலா 45 பள்ளிகள் வீதம், 90 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இந்த 90 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கடந்த மாதம் 21ம் தேதி முதல், 29ம் தேதி வரை, இதுகுறித்து, சென்னையில் உள்ள கல்வித் துறை இயக்குனரகத்தில், கரடி பாத் எஜுகேஷன் கம்பெனி நிர்வாகிகளால், பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, கரடி பாத் எஜுகேஷன் கம்பெனியின் நிர்வாகிகள், 90 பள்ளிகளிலும் நேற்று முதல் ஆய்வு செய்து, இந்த பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் தொலைக்காட்சி பொருத்துவது போன்ற பணிகளை துவக்கி உள்ளனர். இப்பணிகளை இந்த வாரத்திற்குள் முடிக்க, திட்டமிட்டு உள்ளனர். வாரம் 3 வகுப்புகள்இதையடுத்து, அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலம், வரும் திங்கள்கிழமை முதல், 2, 3, 4, 5 ஆகிய வகுப்பு மாணவ, மாணவியருக்கு, கரடி பாத் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வாரம் மூன்று வகுப்புகள் என, ஆண்டுக்கு, 72 வகுப்புகளில், இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், இது ஒரு முதற்கட்ட பணியாகும். கரடி பாத் எஜுகேஷன் கம்பெனி அளிக்கும் பயிற்சி, 90 பள்ளிகளில் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் உயரும் என்ற நம்பிக்கையிலேயே, இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. 

இந்த திட்டம் வெற்றியடைந்தால், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.தமிழகத்தில், முதற்கட்டமாக இந்த திட்டம் 90 பள்ளிகளில் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக