'பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்களை கூடுதல் விலைக்கு வாங்கி, மாணவர்களின் புத்தகச் சுமையை அதிகரிக்கக் கூடாது' என, பள்ளிகளுக்கு மத்திய அரசு எச்சரித்து உள்ளது. 'புத்தகச் சுமையில்லாமல், மன அழுத்தம் இல்லாமல் மாணவர்களை படிக்க வைக்க வேண்டும்' என, மத்திய அரசு அமைத்த, பேராசிரியர் யஷ்பால் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கான பல முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
அதன் விவரம்:மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க, என்.சி.இ.ஆர்.டி.,யும், சி.பி.எஸ்.இ.,யும் முயற்சி மேற்கொண்டுஉள்ளன. இந்நிலையில், பாடத்திட்டத்துக்கு பொருந்தாத, தேர்வு முறை மற்றும் வகுப்புகளுக்கு தேவையில்லாத புத்தகங்களை வாங்க, பள்ளி நிர்வாகம் உத்தரவிடுவது கூடாது. அதிக விலையுடைய, அறிவியல் ரீதியாக பொருந்தாத பல புத்தகங்களை வாங்க, மாணவர்களை பள்ளிகள் நிர்ப்பந்தம் செய்வதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே, பாடத்திட்டம் தவிர்த்த புத்தகங்களை, பள்ளிகள் பயன்படுத்தக் கூடாது. இந்த சம்பவம் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக