ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் சனிக்கிழமை (செப்.5) வழங்கப்படுகிறது.
இந்த விருது பெறும் ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலை பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 201 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 134 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 30 ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 10 விரிவுரையாளர்கள் என மொத்தம் 377 பேர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக