லேபிள்கள்

1.9.15

377 ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, வரும், 5ம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன், 'நல்லாசிரியர்' விருது வழங்கப்படுகிறது.


இந்த ஆண்டு, தமிழகம் முழுவதுமுள்ள பல பள்ளிகளில் பணியாற்றும், 377 ஆசிரியர்கள், ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தொடக்கப் பள்ளி, 201; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, 134; மெட்ரிக், 30; ஆங்கிலோ இந்தியன் பள்ளி, இரண்டு; கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக