ஏர்வாடி தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவுக்கு உள்பட்ட ஏர்வாடியில் உள்ள செய்யது அபுபக்கர் பாதுஷா நாயகத்தின் சந்தனக்கூடு திருவிழா வரும் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதன் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்தும், அதனை ஈடு செய்யும் பொருட்டு வரும் 19.9.2015 அன்று சனிக்கிழமை பணிநாளாகக் கருதப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் அன்றைய தினம் செயல்பட வேண்டும்.
இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வரும் 8.9.2015 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அரசு அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக