மிலாது நபி விடுமுறை காரணமாக, 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில்,
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானதனித்தேர்வர்கள், வரும் 24 ஆம் தேதி வரை அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் மூலமாக ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது, 24 ஆம் தேதியன்று மிலாது நபியை முன்னிட்டு அரசு விடுமுறை அளித்துள்ளது.எனவே, தனித்தேர்வர்கள், சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் வரும் 29 ஆம் தேதி வரை தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக