லேபிள்கள்

20.12.15

புதிய இலவச பஸ் பாஸ் ஆசிரியர்களுக்கு உத்தரவு!!

சென்னை:வெள்ளத்தில் தொலைந்து போன மற்றும் சேதமான இலவச பஸ் பயண அட்டையை மாற்றி தர, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில், மழை, வெள்ளப் பாதிப்பால் இழந்த ஆவணங்களுக்கு பதில்
, புதிய மாற்று பிரதி வழங்க, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கல்வித் துறை அதிகாரிகள், 'பள்ளி மாணவ, மாணவியர் வெள்ளப் பாதிப்பால், தங்கள் இலவச பஸ் பயண அட்டையை தொலைத்திருந்தால் அல்லது சேதமாக்கியிருந்தால், அவர்களுக்கு, போக்குவரத்து துறை மூலம், புதிய பயண அட்டையை தாமதமின்றி பெற்று தர வேண்டும்' என, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக