கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த திருவனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின், 8 வயது மகன், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்,
மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.நேற்று முன்தினம் பள்ளி வகுப்பறையில், மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, மற்றொரு மாணவன் கையில் இருந்த, 'காம்பஸ்' கருவி, இந்த மாணவன் இடது கண்ணில், தவறுதலாக குத்தி விட்டது.
இதில், பார்வை பாதிக்கப்பட்ட மாணவன், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.மாணவனின் தந்தை, போலீசில் புகார் செய்தார். பள்ளி ஆசிரியர் விஜயகுமார் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக