மாற்று ஆவணங்கள் வழங்க ஏற்பாடு:
வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரி வாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை,வாக்காளர் அடையாள அட்டை,வங்கி கணக்குப் புத்தகம், நிலம் / வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர் என தகவல் கிடைக்க பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மேற்சொன்ன ஆவணங்களை இழந்துள்ள பொது மக்களுக்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள்:
இதற்காக சிறப்பு முகாம்கள் வருவாய் வட்டங்களிலும், கல்வி சான்றிதழ்களுக்கு,பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் வருகின்ற14.12.2015 முதல் இரண்டு வாரங்களுக்கு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இம்முகாம்களில்,தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும், மத்திய அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று ஒரு வாரத்திற்குள்ளாக நகல்ஆவணங்களை கட்டணமின்றி வழங்குவர்.
சிறப்பு முகாம்களில் மட்டுமன்றி,பொதுமக்கள் விண்ணப்பங்களை பொது சேவைமையங்கள் மூலமாகவும் கொடுத்து நகல் ஆவணங்களைப் பெறலாம். தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டம் 1908 பிரிவு 57(5)-ன்படி, இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிலம்/வீட்டுமனை சொத்து தொடர்பான பத்திர நகல்கள் யாவும்மூல ஆவணங்களாகக் கருதப்படும்.ஆட்டோ ஒட்டுநர்கள் பலர் ஒட்டுநர் உரிமச் சான்று மற்றும் வாகனப் பதிவுச் சான்று ஆகியவற்றை இந்த மழை வெள்ளத்தால் இழந்துள்ளனர். இந்த ஆவணங்களும் இதே நடைமுறைப்படி வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக